முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்1526551532
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ,துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பதுக்கு உண்டான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விவாதிக்க உள்ளதாகவும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.முக்கிய கொள்கை முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.