ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தி.மு.க. கண்டனம்! 1853383658
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தி.மு.க. கண்டனம்! சமாதானம் குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டி.ஆர்.பாலு எம்.பி. இன்று (12/06/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வன்முறைப் பாதையை நியாயப்படுத்தி ஆளுநர் பேசியிருக்கிறார். வெடிகுண்டு பாதையை சரி என்கிறாரா ஆளுநர்? யாருக்கு அவர் வழிகாட்டுகிறார்? மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு கூறுவது முறையுமல்ல. சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவதாக உள்ளது ஆளுநரின் உரை. மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என உச்சநீதிமன்றமே கூறுகிறது. எல்லையை மறந்தும், மீறியும் தனது கருத்தளிக்கும் உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது சரியல்ல. சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்ட பதவியில் இருப்பவரின் கருத்து, சட்...