ஓபிஎஸ் வீட்டில் திடீர் மாற்றம்.. யாரும் அந்த இடத்துக்கு வர முடியாது.. எடப்பாடிக்கு மறைமுக மெசேஜ்? 1350791908
ஓபிஎஸ் வீட்டில் திடீர் மாற்றம்.. யாரும் அந்த இடத்துக்கு வர முடியாது.. எடப்பாடிக்கு மறைமுக மெசேஜ்? சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்த பேனர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் இணைந்து இருந்த பேனர் அகற்றப்பட்டு, பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா மட்டும் இருக்கும் பேனர் ஒபிஎஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனக் கூறி ஒற்றைத் தலைமை கோஷத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓ.பி.எஸ் மறைமுக மெசேஜ் சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஒற்றைத் தலைமை அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூகம்பமாக உருவெடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியில...