Posts

Showing posts with the label #Government | #Should | #Distributing | #Rations

இனி ரேசனில் இந்த அரிசியை விநியோகம் செய்வதை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு !!

Image
இனி ரேசனில் இந்த அரிசியை விநியோகம் செய்வதை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு !! சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக உள்ள டி.கே.எம் 9 நெல் கொள்முதல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ள அரசு அவ்வகை அரிசியை ரேஷனில் விநியோகம் செய்வதை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு இடங்களில் டி.கே.எம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்தால் சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால் இவ்வகை அரிசியினை ரேஷன் கடைகளில் பெறுவதற்கு பொதுமக்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதனால் டி.கே. எம் 9 அரிசியினை பொது விநியோகத்திற்கு தவிர்க்க முடிவு செய்துள்ள அரசு கேஎம்எஸ் 2022-2023 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் டிகேஎம்9 ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், சந்தையில் தற்போது புழக்கத்திற்கு உள்ள சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.