Posts

Showing posts with the label #Africa | #Thrill | #Victory | #England

மகளிர் உலக கோப்பை இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்கா த்ரில் வெற்றி

Image
மகளிர் உலக கோப்பை இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்கா த்ரில் வெற்றி மவுன்ட் மவுங்கானுயி: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்தது. தொடக்க வீராங்கனை டாமி பியூமான்ட் அதிகபட்சமாக 62 ரன் விளாசினார். அமி ஜோன்ஸ் 53, சோபியா டங்க்லி 26, பிரன்ட் 17, சைவர் 16, எக்லெஸ்டோன் 15* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மரிஸன்னே காப் 10 ஓவரில் 1 மெய்டன் உள்பட 45 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். மசபதா க்ளாஸ் 2, அயபாங்கா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 49.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனை லாரா வுல்வார்ட் 77 ரன் (101 பந்து, 8 பவுண்டரி), ப்ரிட்ஸ் 23, கேப்டன் சுனே லுவஸ் 36, மரிஸன்னே காப் 32, க்ளோ டிரையன் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். த்ரிஷா செட்ட