மகளிர் உலக கோப்பை இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்கா த்ரில் வெற்றி


மகளிர் உலக கோப்பை இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்கா த்ரில் வெற்றி


மவுன்ட் மவுங்கானுயி: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்தது. தொடக்க வீராங்கனை டாமி பியூமான்ட் அதிகபட்சமாக 62 ரன் விளாசினார். அமி ஜோன்ஸ் 53, சோபியா டங்க்லி 26, பிரன்ட் 17, சைவர் 16, எக்லெஸ்டோன் 15* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மரிஸன்னே காப் 10 ஓவரில் 1 மெய்டன் உள்பட 45 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

மசபதா க்ளாஸ் 2, அயபாங்கா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 49.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனை லாரா வுல்வார்ட் 77 ரன் (101 பந்து, 8 பவுண்டரி), ப்ரிட்ஸ் 23, கேப்டன் சுனே லுவஸ் 36, மரிஸன்னே காப் 32, க்ளோ டிரையன் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். த்ரிஷா செட்டி 11, ஷப்னிம் இஸ்மாயில் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆல் ரவுண்டராக அசத்திய மரிஸன்னே காப் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு (6 புள்ளி) அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஹாட்ரிக் தோல்வியுடன் (0) 7வது இடத்தில் பின்தங்கியுள்ளது. வெலிங்டனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன.

Comments

Popular posts from this blog

வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்

கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?

Best Testosterone Booster Supplements 4 Natural Testosterone Booster Brands To Try Los Angeles Magazine #Supplements