Posts

Showing posts with the label #10thResult | #General | #Examination | #Students

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தவருடமும் மாணவிகளிடம் தோற்ற மாணவர்கள்? முழு விவரம்....!18903375

Image
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தவருடமும் மாணவிகளிடம் தோற்ற மாணவர்கள்? முழு விவரம்....! தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9%  அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  ப்ளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று  அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். 10ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 85.8 % பேரும் மாணவிகளில் 94.4% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 886 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 242 சிறைக்கைதிகள் தேர்வு எழுதிய நிலையில்  அவர்களில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் ஒருவர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 45 பேரும்,  கணிதத்தில் 2186 பேரும்,  அறிவியலில் 3841