செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை - கொல்லம் (வண்டி எண்: 06659) இடையே காலை 11.35 மணிக்கும், கொல்லம் - செங்கோட்டை (06660) இடையே காலை 10.20 மணிக்கும் புறப்படும் தினசரி சிறப்பு ரெயில் 16-ந் தேதி (இன்று) முதல் 21-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.