குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு! கதறி அழுத தேர்வர்கள்!253858358
குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு! கதறி அழுத தேர்வர்கள்! சீர்காழியில் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்ததாக கூறி 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் 22 லட்சம் பேர் எழுதினர். தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறு...