குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு! கதறி அழுத தேர்வர்கள்!253858358


குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு! கதறி அழுத தேர்வர்கள்!


சீர்காழியில் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்ததாக கூறி 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் 22 லட்சம் பேர் எழுதினர். தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. 

இந்நிலையில் சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.  இதனிடையே விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வந்ததால், தேர்வு மையம் எதுவென்று தெரியாமல் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதனால் 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. 9.30 மணிக்கு தொடங்கும் தேர்விற்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தேர்வர்கள் 9.05 மணிக்கு வந்ததாக கூறி, அவர்களுக்கு தேர்வெழுத எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வ மையத்தால் தான் குழப்பம் ஏற்பட்டதாக கூறி தேர்வர்கள் முறையிட்டபோதிலும்,  சீர்காழி வட்டாட்சியர் அனுமதி வழங்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சம்பவ இடத்திலேயே தேர்வர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.  

 

Comments

Popular posts from this blog