கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?
கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது மகான். இந்தப் படத்தில் பல முக்கியமான விஷயங்களை கேள்விக்குறியாக்கியிருந்தார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் விக்ரமின் அடுத்தப் படமாக கோப்ரா வெளியாகயுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பும் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. வித்தியாசமான பல கெட்டப்புகளை இந்தப் படத்தில் விக்ரம் போட்டுள்ளார்.
இந்த கெட்டப்புகள் குறித்த போஸ்டர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இது இந்தப் படத்திற்கான சிறப்பான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி உரிமையையும் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி வெளியாகவுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் சில வாரங்கள் ஓடியபின்பு ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை சோனி லைவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பல கோடி ரூபாய்க்கு இந்த உரிமை கைமாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே விக்ரம் படங்கள் ரசிகர்களிடம் மாஸ் காட்டும். ஆனால் இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு முன்னதாகவே அதிகமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் விக்ரம் -அஜய் ஞானமுத்து கூட்டணிக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்போதுமே விக்ரம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்ற நடிகர்களுக்கு சவால் விடும்வகையில்தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் சிறப்பான த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறது.
Comments
Post a Comment