புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
திருப்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் முத்தனம் பாளையம் அடுத்துள்ள தீரன் சின்னமலை நகரில் நேற்றைய தினம் தமிழக அரசின் 1918 எண் கொண்ட டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறாகவும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் திறக்கப்பட்ட மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் முத்தணம்பாளையம் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment