Posts

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழி திருத் தேரோட்டம் இன்று காலை 8.10 மணி...

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழி திருத் தேரோட்டம் இன்று காலை 8.10 மணி அளவில் நடைபெறவுள்ளது; ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரம் 360 டன் எடை கொண்டது.

தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு...

தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து 944 லிட்டர் பறிமுதல்; 3 பேர் கைது, படகையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது கர்நாடக...

ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்

மெஸ்ஸி, நெய்மரை அவமதித்த பி.எஸ்.ஜி ரசிகர்கள்... ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோ!

மெஸ்ஸி, நெய்மரை அவமதித்த பி.எஸ்.ஜி ரசிகர்கள்... ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோ! பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் vs போடோ (Bordeaux) அணிகள் மோதிய லீக் 1 போட்டியில் முன்னணி வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் இருவரையும் பி.எஸ்.ஜி ரசிகர்கள் கடுமையாக சாடினர். அவர்கள் பந்தைத் தொட்டாலே விசிலடித்து அவமரியாதை செய்வது, கத்துவது என தங்கள் கோவத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக மோசமாக விளையாடி அணியின் தோல்விக்குக் காரணமாக இருந்ததால் இப்படி செய்திருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் இரண்டாவது லெக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியோடு மோதியது பி.எஸ்.ஜி. முதல் லெக்கில் 1-0 என முன்னிலையில் இருந்த அந்த அணி, இரண்டாவது லெக்கின் முதல் பாதியில் 1 கோல் அடித்து 2 கோல்கள் முன்னிலை பெற்றது. இரண்டு கோல்களையும் எம்பாப்பே தான் அடித்திருந்தார். இரண்டு கோல்கள் முன்னிலையோடு இரண்டாவது பாதியைத் தொடங்கிய அந்த அணிக்கு ரியல் மாட்ரிட் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது. 18 நிமிட இடைவெளியில் ஹாட்ரிக் அடித்து, ரியல் மாட்ரிட் அணியை காலிறுதுக்குள

இனி ரேசனில் இந்த அரிசியை விநியோகம் செய்வதை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு !!

Image
இனி ரேசனில் இந்த அரிசியை விநியோகம் செய்வதை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு !! சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக உள்ள டி.கே.எம் 9 நெல் கொள்முதல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ள அரசு அவ்வகை அரிசியை ரேஷனில் விநியோகம் செய்வதை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு இடங்களில் டி.கே.எம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்தால் சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால் இவ்வகை அரிசியினை ரேஷன் கடைகளில் பெறுவதற்கு பொதுமக்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதனால் டி.கே. எம் 9 அரிசியினை பொது விநியோகத்திற்கு தவிர்க்க முடிவு செய்துள்ள அரசு கேஎம்எஸ் 2022-2023 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் டிகேஎம்9 ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், சந்தையில் தற்போது புழக்கத்திற்கு உள்ள சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

15.03.2022 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்➤ பெட்ரோல் விலை - ரூ.101.40 (விலையில்...

Image
15.03.2022 பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ➤ பெட்ரோல் விலை - ரூ.101.40 (விலையில் மாற்றமில்லை) ➤ டீசல் விலை - ரூ.91.43 (விலையில் மாற்றமில்லை)

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,92,50,107 ஆக...

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,92,50,107 ஆக உயர்வு; குணமடைந்தோர் எண்ணிக்கை 39,27,90,887ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,66,775 ஆகவும் உள்ளது.