கணவரால் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


கணவரால் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இதையும் படிங்க

ஆசிரியர்

மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பகுதியில் பெண்ணொருவர் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சவுக்கடி பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே கூரான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடித்துவந்த நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

Comments

Popular posts from this blog