பாலியல் ரீதியான பிரச்னைகளை சந்தித்துள்ள ET பட நடிகை, செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி.
பாலியல் ரீதியான பிரச்னைகளை சந்தித்துள்ள ET பட நடிகை, செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த வாரம் வெளியாகி உள்ளது. ஆனால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் செய்தார்கள்.
எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய தகவல்:
பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூர்யாவின் படம் வெளியானது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகிறது. மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
திவ்யா துரைசாமி அளித்த பேட்டி:
மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் திவ்யா துரைசாமி. இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு நியூஸ் ஆங்கராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில் இவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் காலேஜ் படிக்கும் போது ஒரு ரசிகையாக சூர்யா சாரை பார்த்து இருக்கிறேன். பின் ஆங்கராக அவரை சந்தித்து இருக்கேன். இப்போ அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கு. படத்தின் சூட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது.
படப்பிடிப்பில் நடந்தது குறித்து திவ்யா துரைசாமி சொன்னது:
மேலும், படத்தில் செங்கல் சூளையில் நடந்த சண்டைக்காட்சி உண்மையாக நடந்தது. அந்த சீனில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தேன். வேற லெவல் அடியெல்லாம் வாங்கினேன். அந்த ஷாட் எடுக்கும் போது கடைசி நாள் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. அந்த அளவுக்கு அங்கே வெயில் கடுமையாக இருந்தது. அதோடு இப்படி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்த பாண்டியராஜ் சாருக்கு என் நன்றியை சொல்லி சொல்கிறேன். எல்லோரும் இது பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி இல்லை.
திவ்யா துரைசாமி சந்தித்த பாலியல் ப்ரச்சனை:
எல்லா பெண்களும் ஏதோ ஒரு வகையில் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சார்பில் எடுத்து சொல்கிற படம் தான் இது. அதுமட்டும் இல்லாமல் பாலியல் ரீதியான பிரச்சினைகளை நானும் சந்தித்து இருக்கிறேன். ஆனால், அதை தைரியமாக கடந்தும் வந்து இருக்கேன். யாரெல்லாம் நமக்கு நடக்கிற அத்துமீறல்களை வாய் விட்டுச் சொல்லாமல் இருக்கிறார்களோ? அவர்கள் மீது தான் மேலும் மேலும் அத்துமீறல்கள் நடக்கிறது. சூர்யா சார் மிக சிறந்த மனிதர். அவர் பிரஸ்மீட்டில் என்னைப் பற்றி பேசுவார் என்று கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. அவர் ரியல் ஹீரோ.
வைரலாகும் திவ்யா துரைசாமி வீடியோ:
திரைக்கு பின்னாடி அத்தனை நல்ல விஷயங்கள் செய்கிறார். சமூகத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். அவர் என்னைக் கூப்பிட்டு சொன்னதை விட பெருசா எனக்கு என்ன வேண்டும்? அதுவே எனக்குப் போதும். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் என்று திவ்யா துரைசாமி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment