இலங்கைக்கு உதவ முன்வந்த உலக வங்கி: பொருளாதார சிக்கலை தீர்க்க ரூ.4,500 கோடி வழங்க உள்ளது
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், அந்த நாட்டுக்கு உதவ உலக வங்கி முன்வந்துள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு ரூ.4,500 கோடி வழங்க முடிவுசெய்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அவரது அலுவலகம் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, அதனை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அமைப்புகளிடமும் உதவி கோரி வருகிறது.
இந்நிலையில் வாஷிங்டனிற்கு சென்றுள்ள அந்நாட்டின் நிதியமைச்சர் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு காணொலி வாயிலாக கருத்தரங்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment