MRP விலையை மட்டுமே கொடுப்போம்... டாஸ்மாக் கடை மேலாளரை கல்லால் தாக்கிய குடிமகன்கள் இருவர் கைது!


MRP விலையை மட்டுமே கொடுப்போம்... டாஸ்மாக் கடை மேலாளரை கல்லால் தாக்கிய குடிமகன்கள் இருவர் கைது!


சென்னைஅசோக்நகர் 100 அடி சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மதியம் இரண்டு நபர்கள் மதுபானம் வாங்க வந்துள்ளனர். அப்போது இரண்டு நபர்களும் மது பாட்டிலில் இருக்கும் விலையை விட ஏன் அதிகமாக விலை வைத்து விற்கிறார்கள்? என கேட்டுள்ளனர். மேலும், மது பாட்டிலில் இருக்கும் விலையை மட்டுமே தரமுடியும் என கூறி அதற்கு உண்டான பணத்தை கொடுத்து உள்ளனர்.

இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் மது வாங்க வந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து டாஸ்மாக் கடையின் மேலாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரராகவன்(49) என்பவர் கடைக்கு வெளியே வந்து அந்த இரண்டு நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தாங்கள் அதிக விலைக்கு மதுபானங்களைத் விற்கவில்லை எனவும் அரசு நிர்ணயித்த விலை பட்டியலின் அடிப்படையில் தான் மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் வீரராகவன் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இரண்டு நபர்களும் மது பாட்டில் இருக்கும் பணத்தை மட்டுமே தர இயலும் எனக் கூறி உள்ளனர். இதில் மேலாளரான வீரராகவனுக்கும், அந்த இரண்டு நபர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இந்த பிரச்சினையில் கீழே கிடந்த கல்லை எடுத்து மேலாளர் வீரராகவன் மீது அந்த இரண்டு நபர்களும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

காயமடைந்த டாஸ்மாக் கடை மேலாளர் வீரராகவனை கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்பு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மதுக்கடையில் பிரச்சனையில் ஈடுபட்டு மேலாளரை தாக்கிய அசோக்நகர் PTC குடியிருப்பு பகுதியை சேர்ந்த மதன்குமார்(43), அசோக் நகர் 7வது தெருவைச் சேர்ந்த முருகன்(41) ஆகிய இரண்டு நபர்களை கேகே நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Comments

Popular posts from this blog