When is the release date of Dhanush\'s Hollywood film The Gray Man?-295479787


தனுஷின் ஹாலிவூட் படமான தி கிரே மேன் படத்தின் வெளியீட்டு தேதி எப்ப தெரியுமா?


கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த தனுஷ், ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அங்கு ஷமிதாப், அட்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்கிற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’-ல்  தனுஷின் நடிப்பு பிடித்து போகவே அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ், தனுஷுக்கு தாங்கள் இயக்கும் தி கிரே மேன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தனர். இதையடுத்து கடந்தாண்டு அமெரிக்காவில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

தி கிரே மேன் படத்தின் பின்னணி பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதையடுத்து தி கிரே மேன் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை சமீபத்தில் வெளியானது. அதனுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதாவது  ஜூலை மாதம் 28-ந் தேதி நேரடியாக இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தி கிரே மேன் படத்தின் ட்ரைலர் குறித்த தகவலை தனுஷ் வெளியிட்டுள்ளார். அதாவது நாளை இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Best Testosterone Booster Supplements 4 Natural Testosterone Booster Brands To Try Los Angeles Magazine #Supplements

தெற்கு மொராக்கோவில் 8 குடியேற்றவாசிகளின் உடல்கள் கரை ஒதுங்கியது1253149790