நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு நிதியுதவி: முதல்வர் வழங்கினார்!


நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு நிதியுதவி: முதல்வர் வழங்கினார்!


நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.6.2022) தலைமைச் செயலகத்தில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்.

இவ்வரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 இலட்சம் முதலமைச்சரால் 10.12.2021 அன்று வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்: அரசாணை வெளியீடு!
இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று. கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. அவ்வகையில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கம் மற்றும்

இணையும் சசிகலா, ஓபிஎஸ்: என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூபாய் 1 கோடியே 25 இலட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog