பல் விளக்கிக் கொண்டே ரிவ்யூ.. கக விஜய்சேதுபதி.. கூல் சுரேஷின் அட்ராசிட்டி!
பல் விளக்கிக் கொண்டே ரிவ்யூ.. கக விஜய்சேதுபதி.. கூல் சுரேஷின் அட்ராசிட்டி!
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. கடந்த மாதத்தில்தான் இவர் வில்லனாக மிரட்டிய விக்ரம் படம் ரிலீசானது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாமனிதன் படம் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் காயத்ரி. இவர்கள் இருவருமே விக்ரம் படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் இவர்களின் படங்கள் ரிலீசாகியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் இதுவரை மாமனிதன் படத்துடன் சேர்த்து நான்கு படங்களில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று, இடம்பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை படங்களில் நடித்திருந்தார். இந்த நான்கு படங்களுமே விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கப்பட்டுள்ள படங்களாக மாறியுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படம் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ளது. விரைவில் இந்தப் படமும் ரிலீசாக உள்ளது.இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனு ராமசாமியின் படங்கள் அழுத்தமான கதாபாத்திரங்களை வைத்து வெளியாகிவருகின்றன. இந்நிலையில் இந்தப் படமும் வித்தியாசமான கோணத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள மாமனிதன் படம் சிறப்பான விமர்சனங்களுடன் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது. படம் தற்போது கமலின் விக்ரம், சுந்தர் சியின் பட்டாம்பூச்சி, அசோக்செல்வனின் வேழம் ஆகிய படங்களுடன் திரையரங்குகளில் மோதி வருகிறது.
ஆனாலும் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் இந்தப் படம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிலேயே தங்கிய நடிகர் கூல் சுரேஷ், படம்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். காலை வேலையில் இந்தப் பேட்டி நடத்தப்பட்ட நிலையில், பல் விளக்கிக் கொண்டே இந்த பேட்டியை அவர் அளித்துள்ளார்.
இந்த பேட்டியின்போது விஜய் சேதுபதியை கருப்பு கமல்ஹாசன் என்று அவர் பாராட்டினார். மேலும் அவர் உண்மையிலேயே மாமனிதன் தான் என்றும் பாராட்டித் தள்ளினார். இடையிடையில் பல் துலக்கவும் மறக்கவில்லை. இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்தது. இரண்டு நிமிடங்கள் பல் துலக்கிவிட்டே பேட்டியை கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியவில்லை.
மேலும் மாமனிதன் படம் அருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தை தயாரித்துள்ள ஆர்கே சுரேஷ் ஒரு மாமனிதன் என்றும் இயக்கிய சீனு ராமசாமி ஒரு மாமனிதன் என்றும் அவர் மேலும் பாராட்டினார். தொடர்ந்து இந்தப் படம் குறித்து விமர்சிக்கும் தான் ஒரு மா மாமனிதன் என்றும் பாராட்டிக் கொண்டார்.
அவரது இந்த அட்ராசிட்டியை பார்த்தவர்கள் சைடில் பல கமெண்ட்ஸ்களை கொடுத்தவண்ணம் இருந்தனர். தொடர்ந்து பேசிய அவர் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் கருத்தே என்றும் குருத்து எதுவும் இல்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment