பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியில் உலக நாடுகள்178613624


பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியில் உலக நாடுகள்


டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஷின் சோ அபே உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அபே என்று நாரா என்ற மேற்கு ஜப்பான் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை தொடர்ந்து உடல் முழுக்க ரத்தத்தோடு அபே சுருண்டு விழுந்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் துப்பாக்கி சூடு குறித்த பல்வேறு கலவையான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஷின் சோ அபே தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து உள்ளதா, காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகவில்லை. ஜப்பான் பிரதமராக இருந் ஷின்ஷோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 2020ல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்து வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார்

கடந்த 2020ம் ஆண்டு திடீரென எனக்கு உடல்நிலை சரியில்லை. இனிமேலும் அரசு ரீதியான பணிகளை கவனிக்க முடியாது. அதனால் நான் பதவி விலகுகிறேன் என்று ஷின்ஷோ அபே அறிவித்தார். இதற்கு முன் ஏற்கனவே 2006ல் இவர் தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2005ல் பிரதமராக பதவி ஏற்றார். அதன்பின் சரியாக ஒரே வருடத்தில் அந்த பதவியில் இருந்து ராஜினமா செய்தார். இவர் மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் தற்போது இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog