திருப்பூரில் கோர விபத்து :- 3 பேர் பலி..2 பேர் படுகாயம்..!207468983
திருப்பூரில் கோர விபத்து :- 3 பேர் பலி..2 பேர் படுகாயம்..!
திருப்பூர் அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமக உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது காக்கப்பள்ளம். அப்பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை திருப்பூரை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதேபோல் திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்து மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலையே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான அந்த 3 பேர் யார் என்பது குறித்த அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment