குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த கேபிள் பாலம் - ஆற்றுக்குள் விழந்த 350 பேர்
குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த கேபிள் பாலம் - ஆற்றுக்குள் விழந்த 350 பேர்
குஜராத் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பழுதடைந்து இருந்தது. இதை அடுத்து பாலம் புரனமைப்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது.
இந்த புனரமைப்பு பணி சமீபத்தில் நடந்தது. புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கேபிள் பாலத்தில் சுமார் 500 பேர் நின்றனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்தர் படேலை தொடர்பு கொண்டு பேசி, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிமாக மேற்கொள்ளத் தேவையான அதனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விபத்தால் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த பலரின் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளதுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 35 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment