விஜய் - லோகேஷின் 'லியோ' - ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அனிருத் - வேற லெவலா இருக்கே!1798220621
விஜய் - லோகேஷின் 'லியோ' - ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அனிருத் - வேற லெவலா இருக்கே!
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகத்தில் ஃபகத் பாசிலை காஷ்மீரில் சந்தித்தாக ஜோஸ் பேசும் வசனங்களைப் பகிர்ந்து அந்த இடத்திலிருந்து லியோ படம் துவங்கும் என்று ரசிகர்கள் கணித்துவருகின்றனர். இதற்கெல்லாம் இல்லையா சார் ஒரு எண்டு எனும் அளவுக்கு ரசிகர்களின் பதிவுகள் அமைந்துள்ளன.
இயக்குநர் லோகேஷின் முந்தையப் படங்களான மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பெரும் பங்கு வகித்தது. அந்த அளவுக்கு பாடல்கள் மூலமாகவும் பின்னணி இசையின் மூலமாகவும் படத்துக்கு வலு சேர்த்திருந்தார்.
அந்த வகையில் லியோ பட ப்ரமோ வீடியோவில் அனிருத்தின் பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதனை தனிப் பாடலாக வெளியிடுமாறு அனிருத்துக்கு ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பாடல் உருவான விதத்தை வீடியோவாக அனிருத் வெளியிட்டுள்ளார்.
Comments
Post a Comment