ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்!2027981331


ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்!


”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்கும் ஒரு அறை கொடுக்க வேண்டும்"

கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியில் ரூர்க்கிக்குச் செல்லும் வழியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியது. இதனால் பந்த்தின் முழங்காலில் மூன்று முக்கிய தசைநார்கள் கிழிந்ததால் அவருக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. உடல் பூரண குணம் அடைந்து முழு உடல் தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பு பந்த்துக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை பிடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பந்த் குணமடைந்த உடன் அவரை நேரில் சென்று அறைய விரும்புவதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

"எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவன் நல்லா வரணும்னு ஆசை, நான் போய் அவனை பலமாக அறைவேன், நீயே பார்த்துக்கோ. பாரு உன் காயம் மொத்த டீமையும் கெடுத்து விட்டது. நீ சீக்கிரம் குணமாகிவிட வேண்டும்” என கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்கும் ஒரு அறை கொடுக்க வேண்டும்" என்று கபில் தேவ் கூறி உள்ளார்.

அடுத்து வர உள்ள உலகக் கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு முழுவதும் பந்த் அணியில் இடம்பெறுவது சந்தேகம் எனக்கூறப்படுகிறது. இளம் விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ் மேன் என இந்திய அணிக்கு தனது பங்களிப்பை செலுத்திய ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணிக்கு வெற்றிடமாக பார்க்கப்படுகிறது.  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறுவதற்கும், பார்டர்-கவாஸ்கர் டிராபி நாளை தொடங்கவுள்ள நிலையில், பந்த் இல்லாததை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

Comments

Popular posts from this blog