வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும் இன்றைய கட்டுப்பாடு இல்லாத உணவு முறையின் காரணமாக சிறு வயதிலேயே ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் அதிகப்படியான உடல் எடையுடன், பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறார்கள். எனவே நாட்கள் செல்ல செல்ல இவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி உடல் எடையை குறைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் சர்க்கரை வியாதி முதல் உடலில் பலவிதமான நோய்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. இவ்வாறு உடல் நோய் தொற்றுக்கு உள்ளாக முதல் காரணமாக இந்த உடல் எடையும் அமைகிறது. எனவே உடல் எடையை சரியான அளவில் பராமரித்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைப்பதற்கு இந்த பயத்த மாவு தோசை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாருங்கள் இந்த பயத்தமாவு தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பயத்தம் மாவு – 100 கிராம், அரிசி மாவு – இரண்டு ஸ்பூன், ரவை – இரண்டு ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – இரண்டு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உ...
Comments
Post a Comment