Posts

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: காரைக்குடியில் பரபரப்பு

Image
காரைக்குடி: காரைக்குடியில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பென் நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (62). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் செக்காலை பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து விட்டு மீண்டும் பென் நகர் சென்றுள்ளார். காரைக்குடி புதிய பஸ்நிலையம் தேவர் சிலை அருகே வந்தபோது கார் பேட்டரியில் லேசாக புகை வந்துள்ளது. குப்புசாமி உடனே இறங்கி பார்த்துள்ளார். திடீரென அதிகளவில் புகை வந்ததால் காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி உள்ளனர். சிறிது நேரத்தில் பேட்டரியில் இருந்த தீ வேகமாக கார் முழுவதும் பரவி முற்றிலும் எரிந்துள்ளது. இதனை கண்டு காரில் வந்தவர்கள்... விரிவாக படிக்க >>

சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம் விலை இந்தியாவில் மட்டும் உயர்வு.. ஏன் தெரியுமா..?

Image
வியாழக்கிழமை இங்கிலாந்து பொருளாதாரம் 2023 இல் சுருங்கக்கூடும் கணித்து வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது. இதோடு 2022ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் எனப் பேங்க் ஆப் இங்கிலாந்து கணித்துள்ளது. புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கையில் 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. இது 22 ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும். இந்தியாவும் அன்னிய முதலீடு வெளியேற்றத்தைத் தடுக்க ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதேவேளையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏப்ரல் மாதம் 3,91,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு முன்பு 4,31,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. இதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அமெரிக்காவில்... விரிவாக படிக்க >>

அதிபர், பிரதமர் பதவி விலகக் கோரி இலங்கையில் முழு அடைப்பு போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image
கொழும்பு: இலங்கையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் கோத்தபய அரசை கவிழ்க்க எதிர்கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் இன்று 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பலதுறை தொழிற்சங்கங்கள், ஆசிரியர், ரயில், பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைசார் தொழிற்சங்கங்கள் 1,000க்கும் மேற்பட்டவை இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் நேற்று நள்ளிரவு 12 மணி... விரிவாக படிக்க >>

நீதிமன்ற வளாகத்தில் ப.சிதம்பரத்தை விரட்டியடித்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள்..! கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு

Image
வழக்கில் ஆஜராகி வாதாடும் ப.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்க கூடியவர் ப.சிதம்பரம், தலைமைக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது தனது கருத்துகளை கூறிவருகிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் அந்திய முதலீட்டை முறைகேடாக பெறுவதற்கு உதவியாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்தது. நீண்ட நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். அரசியலில் மட்டும் தான் மூத்தவராக இல்லாமல் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளிலும் ஆஜர் ஆகி வாதாடி வருகிறார். இப்படி பட்ட நிலையில் தான் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு... விரிவாக படிக்க >>

இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று பலமுன்னேற்றங்களை...

இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று பலமுன்னேற்றங்களை அடைவதற்கு அச்சாணியாக இருக்கும் இந்த பொதுத்தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று, சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன்.   - பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து

பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக கையுறை.. 3டி...

Image
பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக கையுறை.. 3டி பிரிண்டட் முறையில் கையுறை உருவாக்கிய ஆய்வாளர்கள்

ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,இயக்குநர் மீது...

ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,இயக்குநர் மீது வழக்குப்பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.   வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதால் வழக்குபதிய காவல்துறைக்கு உத்தரவு.