திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை செம்பவன்காடு ஈசிஆர் சாலையை சேர்ந்தவர் சந்திரபோஸ் (55). அதிமுக நகர இளைஞர் அணி துணைச்செயலாளர். நேற்றுமுன்தினம் இரவு குடும்பத்தோடு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சந்திரபோஸ் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் வாசலில் நிறுத்தியிருந்த பைக் எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். புகாரின்படி முத்துப்பேட்டை போலீசார் வந்து பார்வையிட்டனர். அங்கு பெட்ரோல் குண்டு துகள்கள், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் மூடி கிடந்தது. இதையடுத்து போலீசார் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சிசிடிவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார்... விரிவாக படிக்க >>