கிழக்கு அண்டார்டிகாவில் ராட்சத பனி அடுக்கு சரிவு: ரோம் நகரத்தின் அளவு கொண்டது
லண்டன்: கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான வெப்பநிலை காரணமாக அங்கு முதல்முறையாகப் ராட்சத அளவிலான பனிப்பாறை உருகிச் சரிந்துள்ளது. 1,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட, ‘காங்கர் பனி அடுக்கு’ என்னும் பனி அடுக்குகள் உருகிச் சரிந்தது. அதன் அளவு ரோம் நகரத்தின் பரப்பளவுக்கு சமம். பனி அடுக்குகள் என்பது நிலத்தில் இறுக்கமாக இணைக்கப்பட்ட பனிக்கட்டிகள். அவை உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும். கடல் மட்டம் உயராமல் இருக்க அவை உதவும். நன்னீரால் ஆன அண்டார்டிகாவின் பனி அடுக்குகள் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இந்த ஆண்டும் அப்படி நடந்த இந்த நிகழ்வு மிக முக்கியமானது. கிழக்கு அண்டார்டிகாவிலும் கடுமையான வெப்பநிலை நிலவியதை தொடர்ந்து, இம்மாதம் இந்த பிரமாண்டமான பனிக்கட்டி அடுக்கு சிதைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வளிமண்டல... விரிவாக படிக்க >>